Jul 13, 2009
.jpg)
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையைக் கொண்டு நெல்லிக்குப்பம் அர்ரஹ்மான் ஜும்ஆ பள்ளியில் 12.07.2009 ஞாயிறன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த " இஸ்லாமிய மார்க்கமும் அழைப்புபணியும்" குறித்து முதல் வகுப்பு காலை 9.00 முதல் மாலை 06.30 வரை சிறப்பாக நடைபெற்றது. சகோதரர். ராஜ்முஹம்மது மன்பஈ அவர்களது கிராஅத் வரவேற்புரையுடன் துவங்கியது. சகோதரர். ஆலிம். ஜலாலுதீன் அவர்கள் "லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதூர் ரஸுலுள்ளா" கலிமாவின் விளக்கத்தில் அல்லாஹ்வின் பண்புகள், தகுதிகள் மற்றும் இணை ஏற்படுத்தும் விதம் குறித்து தெளிவாகவும், சிறப்பாகவும் உரையாற்றினார்கள்.
ஆண்களும், பெண்களுமாக ஏறத்தாழ 90 நபர்கள் வகுப்பில் பங்கேற்றார்கள். இவ்வகுப்பிற்க்கு வந்திருந்தவர்களை அன்புடன் வரவேற்று கலந்துக்கொணடவர்களுக்கு எழுதுபொருள் வசதி, ஒலிபெருக்கி வசதி, இருக்கை வசதி, தே நீர் வசதி, பகல் உணவு அகியவற்றை அர்ரஹ்மான் ஜும் ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தினர் சிறப்பாய் செய்திருந்தனர்.
இவ்வகுப்பின் அடுத்த பாடம் இன்ஷா அல்லாஹ் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் ஞாயிறன்று நடைபெறும்.
புகழனைத்தும் இறைவனுக்கே!