Feb 2, 2009
.jpg)
.jpg)
.jpg)
அஸ்ஸலாமு அலைக்கும் ,
மாநில அரசின் கல்வித்துறை, சமூக நலத்துறை, தொழிலாளர் நலத்துறை, வேலை வாய்ப்பு பயிற்சிதுறை, இதுவன்றி மத்திய அரசாலும் பல சலுகைகள் உதவிகள் சிறுபான்மை இஸ்லாமியருக்கு செயல்ப்பட்டு வருகின்றன. இது குறித்த விழிப்புணர்வை இஸ்லாமிய மக்களிடம் எடுத்துரைப்பதை நோக்கமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டதே நெல்லிக்குப்பம் இஸ்லாமிய சேவை மையம் (NISC).
இம்மையத்தின் கலந்தாய்வுக் கூட்டம் கடந்த 01.02.2009 ஞாயிறன்று மாலை 5.30 மணியளவில் பெரிய தெரு மதரஸா ஷரீபிய்யாவில் நடைப்பெற்றது.
இந்திகழ்ச்சியில் நெல்லிக்குப்பம் இஸ்லாமிய சேவை மையத்தின் உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள், சமுதாய நல விரும்பிகள், கல்வி ஆவலர்கள் என அனைவரும் கலந்துக்கொண்டனர்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தனர் மேலும் பகுதி பெருப்பாளர்களுக்கு, சமூக நல உதவிக்குரிய மாதிரி படிவங்கள் கோப்புகளாக வழங்கப்பட்டன.
இதில் கலந்துக் கொண்டவர்கள் அனைவரும் மிக்க மனநிறைவுடன் சேவை மையத்திற்க்கு துவா செய்தவர்களாக முடிவில் கலைந்து சென்றனர்.