Jan 30, 2009

இஸ்லாமிய சமுதாய மக்களிடையே கல்வியில் விழிப்புணர்வும், வேலைவாய்ப்பில் அக்கறையும் அரசின் நல உதவிகள் குறித்த விவரத்தினை அறிந்திடச் செய்வதையும் குறிக்கோளாகக் கொண்டு நெல்லிக்குப்பம் வாழ் அனைத்து இஸ்லாமியர்களும் ஒன்றுப்பட்ட நிலையில் துவங்கப்பட்டதே நெல்லிக்குப்பம் இஸ்லாமிய சேவை மையமாகும்.

இவ்வமைப்பின் அவசியத்தையும், தூய எண்ணத்துடன் கூடிய செயல்பாட்டையும் அறிந்த ஆர்வலர்கள், கல்வியாளர்கள் பலர் மேலும் இந்த அமைப்பில் இணைந்து செயல்பட மிகுந்த ஆர்வம் தெரித்துள்ளார்கள். அதன்படி வரும் 01.02.2009 ஞாயிறன்று மாலை 5.00 மணியளவில் பெரிய தெரு மதரஸா ஷரீபிய்யாவில் கலந்தாய்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் சமுதாய ஆர்வலர்களும், கல்வியாளர்களும், மாணவர்களும் அவசியம் கலந்து கொண்டு இவ்வமைப்பின் சேவைக்கு தங்களது மேலான ஆலோசனைகளையும், ஆதரவினையும் வழங்கிட அன்புடன் அழைக்கிறோம்.

0 Comments:

Post a Comment