Sep 26, 2009





நோன்பில் நிகழ்ந்த தவறிலிருந்து தூய்மைப்படுத்துவதற்காகவும் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காகவும் நபி(ஸல்) அவர்கள் ஸதகாத்துல் ஃபித்ரைக் கடமையாக்கினார்கள். ஆதாரம்: அபூதாவூத்

நபி(ஸல்) அவர்கள் அழைப்பாளர்களை மக்காவின் தெருக்களுக்கு அனுப்பி "தெரிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக ஸதகத்துல் ஃபித்ர் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்" என்ற வாசகத்தை சொல்லச் சொன்னார்கள். ஆதாரம்: திர்மிதி

ரமழான் மாத வழிபாடுகளில் ஸதகாத்துல் ஃபித்ர் எனும் பெருநாள் தர்மமும் ஒன்றாகும். ஆண்டு முழுவதும் வறுமையில் வாடி வதங்கும் முஸ்லிம் சகோதரர்கள் பெருநாளில் தம் வறுமையை மறந்து மகிழ்வாக இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் ஏழைகளின் துயர் துடைக்க இஸ்லாம் அத்தருமத்தைக் கடமையாக்கியது. இத்தர்மம் ஏழைகளின் உணவாகப் பயன்படுவதோடு அத்தர்மம் செய்தவர் நோன்பு நோற்றிருக்கும் போது செய்த தவறுகளுக்குப் பரிகாரமாகவும் அமைகின்றது. இது இரக்கப்பட்டு நாம் விரும்பிய அளவு கொடுக்கும் தர்மமல்ல. மாறாக "தகுதியுள்ள ஒவ்வொருவரும் இதை நிறைவேற்றியே ஆக வேண்டும் என வலியுறுத்தப்பட்ட கட்டளையாகும்" ஏழைகளின் துயர்துடைக்கவும் சகோதர வாஞ்சையை நினைவூட்டவும் கடமையாக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் கடந்த 19.09.2009 அன்று இரவு சுமார் 10மணி அளவில் ஃபித்ரா விநியோகம் அர்ரஹ்மான் ஜும்மா பள்ளி வளாகத்தில் விநியோகிக்கப்பட்டது. இதில் சுமார் 375 குடும்பத்தினருக்கு ஃபித்ரா பொருட்கள் கொடுக்கப்பட்டது. அதில் அரிசி, கோதுமை,மைதா,சக்கரை,வனஸ்பதி,மசாலா பாக்கெட்,வெங்காயம்,தக்காளி,உருளை,இஞ்சி,முட்டை மற்றும் கோழி இறைச்சி வழங்கப்பட்டது.

0 Comments:

Post a Comment