Jul 7, 2009

இறைவனின் திருப்பெயரால்...
சகோதர சகோதிரிகளே உஷார் !


தட்டு தாயத்து எழுதப்படும்

கயிறு முடிந்து தரப்படும்

வப்பு சூனியம் பார்க்கப்படும்

ஜின் காட்டேரி விரட்டப்படும்

சலுகை விலையோ ரூ 6000/- ம் தான்

இது மட்டுமா ...

பெண் பிள்ளைகளின் இடுப்பு, மார்பு

மச்சம் அறிவிக்கப்படும்


சகோதர சகோதிரி குடும்பங்கள்

குலைக்கப்படும்.

ஏழை பாழைகளின் பணங்கள்

பிடுங்கப்படும்.

சினிமா ஷுட்டிங்கும் நடைபெறும்,

அரசியல் கூட்டமும் அரங்கேரும்,

போலி கபுரும் உருவாகும்

- - - இவைகளெல்லாம் எங்கே, யார் செய்கிறார்கள் தெரியுமா ?

சின்னத்தெரு பள்ளிவாசலில் தான் !

உலமா போர்வையில் உள்ள போலி ஹசரத் !

நிர்வாகி என்ற பெயரில் மார்க்கம் அறிய முஸ்லிம்கள்.


எச்சரிக்கை !

எனதருமைச் சகோதர சகோதரிகளே !
ஹசரத் ? போர்வையில் இவர் செய்யும் அட்டகாசங்கள் கொஞ்சனஞ்சமல்ல ! ஓதிப்பார்த்துக்கொள்ள வரக்கூடிய பெண்களிடம் இவரது சல்லாப பேச்சுக்கள் அளவு கடந்துவிட்டன. ஏனோ தெரியவில்லை மந்திரித்து விடப்பட்டவர்களைப் போன்ற நிர்வாகிகள் !

எச்சரிக்கைக்காக கீழ்காணும் குர் ஆன், ஹதீஸ்கள்

மருத்துவம் செய்யுங்கள் ஏனெனில் மரணம் போன்ற நோயைத் தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் அல்லாஹ் மருந்தை உருவாக்கியுள்ளான் என நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : உஸாமா இப்னு ஷரீக் (ரலி)
நூல் : அபூதாவூத், திர்மீதி, இப்னுமாஜா


நபி (ஸல்) அவர்களிடம் ஒரு கூட்டத்தினர் வந்தனர். அவர்களின் ஒன்பது நபருக்கு பைஅத் செய்தார்கள். ஆனால் இந்த மனிதரிடம் மட்டும் செய்யவில்லையே ! என மற்றவர்கள் கேட்ட போது இவரிடம் தாயத்து உள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறி அதை அறுத்தெரிந்துவிட்டு அவரிடத்தில் பைஅத் செய்தார்கள். (பின்னர்) யார் தாயத்து அணிந்து கொண்டாரோ அவர் இணை வைத்துவிட்டார் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : உக்பா (ரலி)
நூல் : அஹ்மத், ஹாகிம்


எவன் ஜோசியம் கற்கிறானோ அவன் சூனியத்தின் ஒரு பகுதியைக் கற்றுக்கொண்டவன் ஆவான். ஜோசியத்தை அதிகமாக கற்கும் போது சூனியக்கல்வியும் அதிகரிக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூலில் முடிச்சுப்போட்டு அதில் ஊதியவன் சூனியம் செய்தவன் ஆவான். சூனியம் செய்தவன் இறைவனுக்கு இணைகற்பித்தவன் ஆவான். ஏதாகிலும் ஒரு பொருளை தொங்க விட்டுக்கொள்பவன், அதன் மீதே அவன் சாட்டப்படுவான் என அபூஹீரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : நஸயி

(இறை நம்பிக்கைக்குப் பதிலாக) சூனியத்தை எவன் விலைக்கு வாங்கிக்கொண்டானோ அவனுக்கு மறுமையில் யாதெரு பாக்கியமும் இல்லை என்பதை தெளிவாக அவர்கள் அறிந்திருக்கிறார்கள் . (2 : 102)

அவர்கள் சூனியத்தைக் கொண்டும், ஷைத்தானைக் கொண்டும் நம்பிக்கைக் கொள்கிறார்கள். (4 : 15)

பேய் அரசாண்டால் ... பிணம் தின்னும் சாத்திரங்கள் !!


இப்படிக்கு,

மதரஸா அஹ்லுஸ் ஸுன்னா,
சின்னத் தெரு,
நெல்லிக்குப்பம்.

0 Comments:

Post a Comment