Jan 24, 2009


அமெரிக்கா வில் உள்ள குவாண்டநாமோ சிறைச்சாலையை ஓராண்டு காலத்துக்குக்குள் மூடவேண் டும் என்று புதிய அதிபர் ஒபாமா ஆணையிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவிக்கிறது.

அதிபராகப் பொறுப்பேற் றுக் கொண்டவுடன் ஒபாமா அதிரடி ஆணைகளைப் பிறப் பித்து வருவதாகத் தெரிவிக்கும் தகவல்கள், முதல் கட்டமாக குவாண்டநாமோ சிறைச் சாலையை ஓராண்டு காலத்திற் குள் மூடவேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளதாக வும், இது தொடர்பாக கையெ ழுத்திட்டாகவும் தெரிவிக்கின்றன.

குவாண்டநாமோ போன்ற சிறை முகாம்களை மூடுவேன் என்று அதிபர் தேர்தல் பிரச் சாரத்தின் போது ஒபாமா உறு தியளித்திருந்தார். இச்சிறைச் சாலை மூடப்பட்டதும் அந்தச் சிறையில் உள்ளவர்கள் மற்ற நாடுகளுக்கு மாற்றப்படவோ, அமெரிக்க நீதிமன்றங்களில் நிறுத்தப்படவோ மாட்டார் கள் என்று கூறப்படுகிறது.

குவாண்டநாமோவில் போர் குற்ற விசாரணைகளை 120 நாட்களுக்கு நிறுத்தி வைக்க ஒபாமா ஆணையிட்டதைத் தொடர்ந்து இந்த புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட் டுள்ளது. இச்சிறைச் சாலையை மூடுவதற்கு அமெரிக்க மக்கள் பெரும் அளவு ஆதரவு தெரி வித்துள்ளதாக கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. இச் சிறையில் உள்ளவர்களுக்கு ஒபாமாவின் ஆணையால் விடு தலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments:

Post a Comment